திமுக செயற்குழு கூட்டம்; மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை
1/13/2021 6:17:32 AM
திருச்செங்கோடு, ஜன.13: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செங்கோட்டில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 19ம்தேதி குமாரபாளையத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டம் குறித்து ஆலோசக்கப்படுகிறது. எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை
80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு
டூவீலர், காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் பறிமுதல்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து 7 டன் கழிவுகள் எரிந்து நாசம்
சிறுநீரக பிரச்னைகளுக்கு சிறப்பு முகாம்