அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
1/13/2021 1:59:34 AM
வேலூர், ஜன. 13: வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் பஸ்களில் டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சத்துக்கும் மேல் முறைகேடு நடப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய கோட்டங்களுடன் 20 மண்டலங்களை கொண்டு 330 டெப்போக்கள் இயங்கி வருகிறது.
இதுதவிர அரசு விரைவு போக்குவரத்துக்கழகமும் இயங்கி வருகிறது. இவற்றில் தினமும் 2 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அரசு பஸ்களுக்கு அந்தந்த டெப்போக்களில் டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள பஸ்களில் டீசல் நிரப்புவதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 650க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்சுக்கான டீசல் அந்தந்த பெட்போவில் உள்ள பெட்ரோல் பங்க் மூலம் நிரப்பப்படுகிறது.
இதில் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.5 கி.மீட்டர் முதல் 6 கி.மீட்டர் வரை மைலேஜ் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஆயுட்காலம் முடிந்த பஸ்கள் இயக்கப்படுவதால், மைலேஜ் வரவில்லை.
அரசு பஸ்களில் 165 முதல் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க்கில் முழு கொள்ளவுக்கு டீசல் நிரப்பப்படுவதில்லை. அதற்கு மாறாக பஸ் இயக்கப்படும் தூரத்தினை கணக்கிட்டு, அதற்கு தேவையான டீசல் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் மாதந்தோறும் அந்தந்த டெப்போக்களில் உள்ள டீசல் கையிருப்பு கணக்கிலும், நிர்வாகத்திற்கு கணக்கு காட்டும் டீசலின் அளவிற்கு சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.அதன்படி வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 10 டெப்போக்களில், ஒவ்வொரு மாதமும் சுமார் 24 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு நடக்கிறது.
இதனால் மாதந்தோறும் ₹20 லட்சத்துக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து, டீசல் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தை போல், தமிழகத்தில் உள்ள டெப்போக்களிலும் டீசல் முறைகேடு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
₹10,000 மதிப்பிலான பொருட்களுக்கு ரசீது ₹50,000 ரொக்கம் கொண்டு சென்றால் ஆவணம் கட்டாயம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்
தேர்தல் விதிகளை மீறினால் சீல் வைக்கப்படும் விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்களை தினமும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் கலெக்டர் உத்தரவு
பிஎஸ்எப் படையினர் 89 பேர் வேலூர் வருகை தமிழக- ஆந்திர எல்லைகளில் கண்காணிப்பு
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மூடிய எம்ஜிஆர் சிலை மீண்டும் திறப்பு வேலூரில் அதிகாரிகள் குழப்பம் தேர்தல் நடத்தை விதிகள் என்ன?
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்