வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
1/13/2021 1:34:31 AM
தென்காசி, ஜன. 13: தென்காசி அடுத்த வல்லம் அண்ணாதெருவை சேர்ந்தவர் பாலம்மாள் (74). இவர் கடந்த 4ம் தேதி அதிகாலை வெளியே நடந்துசென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒருவர், பாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தார். மொத்தம் 16 கிராம் எடைகொண்ட நகையில் 7 கிராம் பாலம்மாவின் கழுத்தில் தங்கிவிட்டது. மீதமுள்ள 9 கிராம் நகையுடன் தப்பிச்சென்றவர் குறித்து குற்றாலம்
போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வுமேற்கொண்ட போது நகை பறிப்பில் ஈடுபட்டது வல்லம் ஆர்சி தெருவைச் சேர்ந்த தேவேந்திரனின் மகனும், திருப்பூரில் துணி கட்டிங் மாஸ்டராக பணிபுரிந்தவருமான மணிகண்டன் (45) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறப்பு
நெல்லை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர் கைது
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு எதிரொலி கூடுதல் பாதுகாப்பு மையங்கள் தயாராகிறது குடியிருப்பு பகுதியில் அமைப்பதால் தொற்று அச்சத்தில் பொதுமக்கள்
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதி கேமரா காட்சி மிஸ்சிங்கால் பரபரப்பு
பாளையில் கபசுர குடிநீர் வழங்கல்
நடிகர் விவேக் படித்த பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விநியோகம்