எஸ்பி ஆபிசில் காதல் ஜோடி தஞ்சம்
1/12/2021 6:10:13 AM
தர்மபுரி, ஜன.12: பென்னாகரம் அருகே ஆரல்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மேனகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நேற்று காலை பாதுகாப்பு கேட்டு தர்மபுரி எஸ்.பி. ஆபிசில் தஞ்சமடைந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் மேனகா கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, கடந்த 2 வருடங்களாக நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 9ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில், சீனிவாசன் என்னை கடத்திச் சென்று விட்டதாக திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்துள்ளனர். மேலும், உறவினர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
கோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா
ஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்
கொரோனா விதிமுறை மீறல் ₹2.05 லட்சம் அபராதம் வசூல்
மொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை சரிவு
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!