SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கைமுறையில் பிரசவ சிகிச்சைக்கு முயன்றதால் விபரீதம் வயிற்றிலேயே குழந்ைத இறந்தது, தாயும் பரிதாப பலி

1/12/2021 5:13:42 AM

பெரம்பலூர்,ஜன.12:பெரம் பலூர் அருகே இயற்கை முறையில் பிரசவ சிகிச்சைக்கு முயன்று விபரீதத்தால் வயிற்றிலேயே இறந்து அழுகிய குழந்தை. டெலிவரியில் சிக்கல் ஏற்பட்டதால் தாயும் பலியானார்.. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா பூலாம்பாடி புதுத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் விஜயவர்மன்(34). அக்குப் பஞ்சர் வைத்தியம் கற்றவர். இவருக்கும் சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா,ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரது 2வது மகளான அழகம்மாள்(30) என்பவரு க்குமிடையே ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆனது.கடந்த ஏப்ரல் மாதம் அழகம் மாள் கர்ப்பமாகி உள்ளார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சுகாதார துறை யினர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் வந்து முறையாகப் பரிசோ தித்து சிகிச்சை பெற்றுப் பிரசவம் பார்க்க, அழகம்மா ளுக்கு வீடு தேடிச் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் விஜயவர்மன் அக்குபஞ்சர் படித்துள்ளதால் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்..பிஎஸ்சி நர்சிங் படித்துள்ள அழகம்மாளும் கணவரின் பேச்சை ஏற்றுக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலே யே இருந்து வந்துள்ளார்.

இதனையறிந்த சுகாதாரத் துறையினர் விஜயவர்மன் வீட்டிற்கே நேரில் சென்று சிகிச்சைக்கு அழைத்தும் வராததால், அரும்பாவூர் போலீசில் புகாரும் கொடுத் துள்ளனர். அதற்கு போலீசாரிடம் பதிலளித்த விஜய வர்மன்-அழகம்மாள் தம்ப தியினர், குழந்தை பிறப்பில் ஏதாவது பாதிப்பு நேர்ந்தால் அதற்கு எங்கள் பகுதி சுகாதாரத் துறையினர் பொறுப்பல்ல எனத் தெரி வித்து விட்டதாக கூறப்படு கிறது. இதனிடையே அழக ம்மாளுக்கு கடந்த 28ம்தேதியே குழந்தை பிறக்குமெ ன எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாட்கள் தள்ளிப் போனது.வஜயவர்மனும் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுமெனக் காத்திருந்தார். இந்நிலையில் கடந்த 9ம்தேதி இரவு அழகம்மாளுக்குக் வயிற்றுவலிஏற்படவே உள் ளூர் மருத்துவர் வரவழைக்கப்பட்டு, குழந்தை இறந்து விட்டது உறுதியானதால் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் வயிற்றி லேயே இறந்து அழுகிய நிலையில் இருந்த குழந்தையை அகற்றிய பிறகு, அழ கம்மாள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி அழகம்மாள் இறந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் அழக ம்மாள் இறந்துள்ளதால், இதுகுறித்து பெரம்பலூர் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அழகம்மாளின் தந்தை ராமர் தெரிவித் ததாவது : மகளுக்கு தலை ப் பிரசவம் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு (பூலாம்பாடி) வந்துவிட்டோ ம். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று குழந்தைகள் வீட்டிலேயே சுகப் பிரசவம் ஆக பிறந்துள்ளது அழகம்மாளுக்கும் சுகப்பிரசவம் நடக்கும் என நம் பி காத்திருந்தோம். வலிவந்த போது இங்குள்ள மருத் துவரை அழைத்துவந்து பார்த்தபோது பாதிகுழந் தை வந்தது. அதனால் பெரம்பலூருக்கு 108ஆம்புலெ ன்சில் கொண்டுசென்று இ றந்த குழந்தையை வெளி யேஎடுத்தனர்.அதனால்சுய நினைவு இழந்த அழகம்மாளை திருச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு கையெ ழுத்து போட்டபிறகுதான் சிகிச்சை ஆரம்பித்தனர். இருந்தும் இறந்துவிட்டார் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அழகம்மாளி ன் அண்ணன் ராமச்சந்தி ரன் தெரிவிக்கையில், என து அக்கா பிஎஸ்சி நர்சிங் முடித்து சேலம் மாவட்டம் சின்னசேலத்தில் நான்கு வருடம் பிரசவ வார்டில் தான் நர்சாக வேலை பார்த் தார். அதனால் அவருக்கு பிரசவ காலத்தில் பராமரிக்கும் முறை நன்குதெரியும் அதனால் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வில்லை. திருச்சி அரசு மருத்துவ மனையில் தான் இறந்தார் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்