நள்ளிரவில் 2 பைக் எரிந்து சேதம்
1/12/2021 4:20:10 AM
ஈரோடு, ஜன. 12: ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்தவர் வெங்கேடேஷ் (43). ரயில்வே அதிகாரி ஒருவரின் கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அவரது பைக்கை, அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அதேபோல், அவரது கீழ் தளத்தில் வசிக்கும் ரயில்வே பெண் ஊழியரான புனிதா (42) என்பவரும் வெங்கடேஷ் பைக்கிற்கு அருகே அவரது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேஷின் பைக் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த தீ அருகில் இருந்த புனிதாவின் ஸ்கூட்டரில் பரவியது. புகை மூட்டத்தை பார்த்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், வெங்கடேஷின் பைக் முழுமையாக எரிந்து நாசமானது. புனிதாவின் ஸ்கூட்டர் பின்புறம் மட்டும் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மர்ம நபர்கள் வெங்கடேஷின் பைக்கிற்கு தீ வைத்து சென்றனரா? அல்லது பைக்கில் பேட்டரி கசிவு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை
அறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு
பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை
மீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!