திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
1/11/2021 5:39:49 AM
ஆட்டையாம்பட்டி, ஜன.11: வீரபாண்டி ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் சீரகாபாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் கலந்து கொண்டு பேசினார். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து பகுதியிலும் திமுக சார்பில் கொண்டாடுவதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கட்சி கொடி, கம்பங்களை 350 பேருக்கு வழங்கினார். இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பொங்கல் விழா நடத்துவது குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி
கோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு
ஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை
சேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்
கொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்