சவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது
1/11/2021 2:15:55 AM
தண்டையார்பேட்டை, ஜன.11: சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவன அதிபர் தலில் சந்த் அவரது மனைவி புஷ்பா பாய் மகன் சீத்தல்குமார் ஆகியோர் கடந்த நவம்பர் 11ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சீத்தலின் மனைவி ஜெயமாலா, மைத்துனர்கள் கைலாஷ், விகாஷ் மற்றும் நண்பர்கள் விஜய் உத்தம், ரபீந்தரநாத்கர், ராஜூ ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ்துபே என 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராஜிவ் துபே தவிர்த்து மற்ற அனைவர் மீதும் நேற்று முன்தினம் குண்டர் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் கைலாஷூக்கு நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்த ராஜஸ்தானை சேர்ந்த சந்திர தீப் சர்மா(25) என்பவரை பிடிக்க கடந்த வாரம் இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று முகாமிட்டு நேற்று முன்தினம் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
கொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்
பாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி
திறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் விதிமீறிய பிரியாணி கடைக்கு சீல்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!