போக்சோவில் வாலிபர் கைது
1/7/2021 4:48:37 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் அகல்யா (17). (பெயர்கள் மாற்றம்). செங்கல்பட்டில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்தார். கடந்த 31ம் தேதி வேலைக்கு சென்ற அகல்யா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசில், பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு அடுத்த வல்லம் நாவிதர் நகரை சேர்ந்த விமல்ராஜ் (25) என்பவர், சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையொட்டி கடந்த 3ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், மதுராந்தகம் அருகே தேவாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த விமல்ராஜை பிடித்தனர். அவருடன் இருந்த சிறுமியை மீட்டு, தாம்பரம் பெண்கள் விடுதியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார், சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட விமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்
வக்கீல் கொலையில் 3 பேர் கைது
மணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்
மாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்