வேகத்தடை இல்லாத தாழம்பூர் நாவலூர் - சிறுசேரி சந்திப்புகள்: சிக்னலும் இல்லாததால் அடிக்கடி விபத்து
1/6/2021 5:00:04 AM
திருப்போரூர்: தாழம்பூர் நாவலூர் - சிறுசேரி சந்திப்புகளில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த பகுதிகளில், சிக்னலும் இல்லாததால் பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான நாவலூர், சிறுசேரி, தாழம்பூர், பொன்மார் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும், விவசாய நிலங்களை, வீட்டு மனைகளாக மாற்றி புதிய மனைப்பிரிவுகளும் உருவாகிவிட்டன.
இதனால், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் புதிதாக இந்த பகுதிகளில் குடியேறியுள்ளனர். இதையொட்டி, பைக், கார், வேன் உள்பட பல்வேறு வாகனப் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி, மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்காக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதையொட்டி, பழைய மாமல்லபுரம் சாலையை போன்று உள்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக நாவலூரில் இருந்து தாழம்பூர் வழியாக பொன்மார் செல்லும் சாலையும் புதுப்பாக்கத்தில் இருந்து சிறுசேரி, காரணை வழியாக ஒட்டியம்பாக்கம் செல்லும் சாலையும் தற்போதைய சூழ்நிலையில் அதிக வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளாக மாறிவிட்டது.
தாழம்பூர் - பொன்மார் இடையே காரணை என்ற இடத்தில் இந்த இரு சாலைகளும் சந்திக்கும் 4 முனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை ஒட்டி பல் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சந்திப்பாக இந்த இடம் மாறிவிட்டது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள், ஒன்றையொன்று முந்திச் செல்லும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தொடர் விபத்துகளின் காரணமாக உயரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
எனவே, இந்த சந்திப்பில் 4 திசைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 முனை சந்திப்பில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரிகளின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் இந்த 4 முனை சந்திப்பில் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்க முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்
திருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்
வெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி
திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
மணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!