SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீசாருடன் தள்ளுமுள்ளு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

1/6/2021 4:54:09 AM

மண்ணச்சநல்லூர், ஜன.6: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சுரேஷ் (26). அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(26). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண் ராஜேஷிடம் மட்டும் பேசி வந்துள்ளாராம். மேலும் சுரேஷிற்கு அந்த பெண் தங்கை முறை உறவு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷிற்கும், ராஜேஷிற்கும் நேற்று முன்தினம் அவர்களது காதல் தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சுரேஷ் அங்குள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் சடலமாக தொங்கினார். ஆடுமாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து உடனே மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுரேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு: துறையூர் அடுத்த கண்ணனூரை சேர்ந்தவர் கனகராஜ்(60). கால்நடை மருத்துவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள். கண்ணனூர் மெயின் ரோட்டில் இவரது பெற்றோர் பெட்டிக்கடை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் தனது கடைக்கு எதிரே உள்ள டீ கடையில் கனகராஜ் டீக்குடித்து விட்டு டூவீலரில் ஏறும்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் வீட்டுக்கு உடலை எடுத்து வந்தனர். கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தாய் சரஸ்வதியம்மாள் (81) மகன் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியில் படபடப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். பின்னர் மகன் கனகராஜ் இறந்த செய்தியைக் கேட்டு மகனின் முகத்தை பார்த்த தாய் சரஸ்வதிஅம்மாள் அதே இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சுற்றுப்புற கிராம பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லோடு ஆட்டோ மோதி  எலக்ட்ரீஷியன் பலி: திருச்சி ராம்ஜிநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (25). எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நண்பர் பொன்னர் என்பவருடன் பைக்கில் வீடு திரும்பினார். குணசேகரன் பைக்கை ஓட்டினார். இதில் திருச்சி திண்டுக்கல் மெயின்ரோடு ராம்ஜிநகர் திருப்பத்தில் திரும்பும் போது பின்னால் வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குணசேகரன் நேற்று இறந்தார். படுகாயத்துடன் பொன்னர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாரடைப்பால் பஸ்சில் கண்டக்டர் பரிதாப சாவு: ரங்கம் கீழ் அடைஞ்சான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட டெப்போவில் நடத்துநராக பணியில் இருந்தார். இவர் நேற்று டெப்போல் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு பஸ்சில் வரும்பொழுது அரிஸ்டோ ரவுண்டானா பாலம் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை உடனே பஸ்சில் உள்ளவர்களிடம் கூறினார். அதே பஸ்சில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் விசாரிகின்றனர்.

50 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்: திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசியில் பேசிய நபர், திருச்சி அரியமங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தி விற்பனை செய்வதாக கூறினார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர சோதனையில், அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள இஸ்மாயில் என்பவரின் வீட்டில் 50 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இஸ்மாயிலை கைது செய்த போலீசார், அவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ஏற்கனவே எ.புதூரில் அரிசி மூட்டை கடத்தி கையும் களவுமாக சிச்சிய ரேசன் கடை பெண் ஊழியர் உள்பட 2 பேரை தப்பவிட்டது போல் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

காதல் தோல்வியா? போலீஸ் விசாரணை கொடுக்காவிட்டால் குத்திவிடுவேன்...
பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தினமும் அட்டகாசம் செய்து வருகின்றனர். அதிவேக பைக்கில் உலா வரும் இவர்கள் கத்தியை காட்டி மிரட்டி செயின், பணம் பறித்து வருகின்றனர். மேலும், வண்டியில் தனியாக செல்வோரை கற்கள் கொண்டு அடித்து, அவரை நிறுத்தி நூதன வழிபறியிலும் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு பணி முடிந்து வீடு சைக்கிளில் வீடு திரும்பிய தொழிலாளி ஒருவரை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி ‘பணத்தை கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்’ என்று சட்டையை பிடித்து கொண்டு மிரட்டியுள்ளனர். அப்போது பின்னால் பைக்கில் வந்தவரை பார்த்ததும் அந்த வழிபறி நபர், தயாராக பைக்குடன் இருந்த கூட்டாளியுடன் தப்பினர். அப்போது அவர்களை விரட்டி சென்றதில் சி.பி.1 சோதனை சாவடியை கடந்து மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-school-beach

  ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்