100 நாள் பணியின்போது மாரடைப்பால் பெண் தொழிலாளி சாவு
1/6/2021 4:47:34 AM
புதுக்கோட்டை, ஜன. 6: கீரமங்கலம் அருகே 100 நாள் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு பெண் தொழிலாளி இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் ஊராட்சி கரம்பக்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி சிவயோகம் (65). இவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் நேற்று அங்குள்ள குளம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த சிவயோகத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
பயணிகள் கடும் அவதி கறம்பக்குடி பேரூராட்சியில் நிலுவையில் இருந்த ரூ.42 லட்சம் வரி பாக்கி வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு
பகவாண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பணியாளர்கள் பற்றாக்குறையால் கூடுதல் பேருந்து இயக்குவதில் சிக்கல்
தொடர் நஷ்டம் ஏற்படும் அபாயம் திருமயம் அருகே சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலை
விராலிமலை முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி வாகன விற்பனையில் 20 சதவீதம் சரிவு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!