பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தல்
1/5/2021 5:30:16 AM
ஈரோடு, ஜன.5: பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வீடற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்புலிகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்புலிகள் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டம், பெருந்துறை ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழ்சாக்கியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன், கொள்கை பரப்பு செயலாளர் விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிப்காட் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைகளாக வழங்க வேண்டும். மேற்கு மண்டல மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பா.ஜ.வுக்கு எதிராக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்வது, மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது, மேற்கு மண்டலங்களில் உள்ள தனி தொகுதிகள் அருந்ததியர்களுக்கு வழங்க கோரி 11ம் தேதி பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்