SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மா மினி கிளினிக் என்பதை தமிழில் பெயர் வைத்திருக்கலாம் துவக்க விழாவில் திமுக எம்எல்ஏ பேச்சு

1/4/2021 5:21:30 AM

திருப்புத்தூர், ஜன.4: அம்மா மினி கிளினிக் என்பதை தமிழில் பெயர் வைத்திருக்கலாம் என்று துவக்க விழாவில் திமுக எம்எல்ஏ பெரியகருப்பன் பேசினார். திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் துவக்க விழா நடந்தது. கலெக்டரை் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். சுகாதார இணை இயக்குனர் யசோதா வரவேற்றார். விழாவில் கேஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏ பேசியதாவது, ‘‘சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இக்கிராமத்திற்கு ஏதாவது ஒரு தொகை ஒதுக்கி விடுவேன்.

மதங்களால் மக்களை பிரிக்க முடியாது என்பதற்கு இக்கிராமம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. 10 ஆண்டு காலம் திமுக எதிர்கட்சியாக இருந்தாலும், ஒரு ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு இணையாக நான் இந்தப்பகுதிக்கு செய்துகொண்டு வருகிறேன். தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு, தமிழில் திட்டத்திற்கு பெயர் சூட்டாமல், ஒரு இடத்தில் முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் திட்டம் என இருக்கு. நீங்கள் எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளுங்கள். உலகின் பண்மையான, தொண்மையான, இலக்கியங்கள் நிறைந்த மொழி தமிழ் மொழி. மினி கிளினிக் ஆங்கிலப்பெயரை கொண்டு வந்து இங்கு வைத்துள்ளனர். இந்த திட்டத்திற்குகூட ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

மினி கிளினிக் என்பது மாற்று மொழிக்கு ஒரு ஹிந்திக்கோ, ஒரு சமஸ்கிருதத்திற்கோ வழிவிடுவதைப்போல இத்திட்டதின் பெயர் அமைந்துள்ளது. பெயர் எதுவாக இருந்தாலும் செயல்பாடு கிறப்பாக இருக்கவேண்டும்’’என்றார். மினி கிளினிக் துவக்கி வைத்து அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்; மினி கிளினிக் துவக்குவதில் தொகுதி பாரபட்சம் பார்க்கப்படுவதில்லை. மாவட்டத்தில் துவக்கப்படும் 36 மினி கிளினிக்குள் சமமாக தொகுதிகளுக்கு துவக்கப்படுகிறது. இதுவரை 18 கிளினிக்குகள் மாவட்டத்தின் தொகுதிகளுக்கு சமமாக தரப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்னை என்றார்கள்.

கிராமங்களின் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.1,850 மதிப்பில் காவிரிக்கூட்டுக் குடிநீர் திட்டம் டெண்டர் முடிந்து துவங்க உள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விவசாயிகளுக்கான திட்டங்களாக கண்மாய், கால்வாய் தூவாருல், ஆக்கிரமிப்பு அகற்றம் அனைத்து கிராமங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.’ என்றார். இதில் திருப்புத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், துணை சேர்மன் மீனாள் வெள்ளைச்சாமி, ஒன்றியக கவுன்சிலர்கள் சகாதேவன், ராமசாமி, சரவணன், நாகராஜன், எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., செந்தில்நாதன், மாவட்ட வேளாண் விற்பனைகுழு தலைவர் கரு.சிதம்பரம், திமுக ஊராட்சி செயலர் நாகூர்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி மன்றத்தலைவர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2021

  19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2021

  18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • niger-scl-15

  நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

 • maharastra-15

  தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

 • 15-04-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்