மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கோவில்பட்டியில் மக்கள் கிராம சபை கூட்டம்
12/30/2020 2:00:29 AM
கோவில்பட்டி, டிச. 30: கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் துறையூரில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் வெயிலுமுத்து, கிளை செயலாளர் அந்தோணிசாமி, துணைச் செயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். குழந்தைராஜ் வரவேற்றார். கூட்டத்தில், விவசாயிகளை வஞ்சித்ததோடு, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிய அதிமுக அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழப்பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி ரவிக்குமார், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜன், மாணவரணி துணை அமைப்பாளர்கள் கணேசன், செல்வமணிகண்டன், தாமோதரகண்ணன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜன், தொண்டரணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் கனகராஜ், சோலையப்பன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். இதுபோல் கிளவிபட்டி, ஊத்துபட்டியிலும் திமுக சார்பல் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
ராம நவமி விழா
சூதாடிய 5 பேர் கைது பைக்குகள் பறிமுதல்
கொரோனாவை கட்டுப்படுத்த தூத்துக்குடியில் காய்ச்சல் முகாம்
தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் இல்லத்திருமண விழா
தூத்துக்குடியில் ஆட்டோ எரிப்பு
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்