SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் தேசிய கொடி கம்பம்

12/25/2020 4:48:45 AM

ஊட்டி, டிச. 25: ஊட்டியில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக 100 அடி உயர கொடி கம்பம் நடப்பட்டு, தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 78 ரயில் நிலையங்களில் 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் நடப்பட்டு, அதில் தேசிய கொடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ள ரயில் நிலையத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இக்கொடி கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொடி கம்பம் மற்றும் பெரிய தேசிய கொடி உள்ளூர் மக்களையும் மற்றும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்துள்ளது. பலரும் இந்த கொடி கம்பத்துடன் சேர்த்து ரயில் நிலையத்தை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்