SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியவர்கள், குழந்தைகள் வர தடை

12/24/2020 4:15:31 AM

சேலம், டிச.24: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் நாளை (25ம் தேதி) வைகுண்ட ஏகாதசி உற்சவம் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. கொரோனா தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி அரசு வழிகாட்டி நெறிமுறைகளின் படியும், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளின் படியும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்யவேண்டும். கோயிலில் தரிசனம் 25ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை tnhrce.gov.in இணையதள முகவரியில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சொர்க்கவாசலை யொட்டி அழகிரிநாதர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை அறிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக வெப்ப நிலை கண்டறியும் கருவி, கிருமிநாசினி மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது: கோட்டை அழகிரிநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை யொட்டி, முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது தேவைக்கேற்றாற் போல் இலவச தரிசனம் அல்லது கட்டண விரைவு தரிசனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தரிசனத்திற்கு வரும்போது ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட் மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.

65 வயத்திற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய்,கர்ப்பிணி பெண்கள்,பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.கோயில் நுழைவுவாயில்,பிரகாரங்கள் சன்னதி ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்லும் வழியிலும்,வரிசையிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள், பழைய புத்தக கடை வீதி வழியாகவும், குண்டு போடும் தெரு (வெங்கடசாமி தெரு) வரும் க்யூ வரிசையில் சமூக இடைவெளி பின்பற்றி வரவேண்டும். கோயில் திருவிழாக்களை பக்தர்கள் காணும் வகையில் வலை தளத்தில் ஒளிபரப்பப்படும். சொர்க்கவாசல் 25ம் தேதி அன்று திறக்கப்பட்டு ஜன.4ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் (பகல் பத்து உற்சவம்). பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் கிடைக்காத நபர்கள் மற்ற நாட்களில் தரிசனம் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர் .    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

  • 15-04-2021

    22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-04-2021

    15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்