திருச்சி அண்ணா ஸ்டேடியம் நீச்சல் குளம் திறப்பு
12/23/2020 6:18:33 AM
திருச்சி, டிச.23: திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தினசரி பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை விதிமுறைகளுடன் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது. 12 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும்போது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் இயங்குவதற்கு அனுமதி இல்லை. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும். நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளிவிட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகச்கவசம் அணிதல், நீச்சல் குளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.
வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் நீச்சல் பயிற்சி பெற அனுமதி இல்லை. சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள் அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு நுழைவு படிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று சான்றுடன் சமர்ப்பித்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
நோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்
திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி
தந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை
87 பேர் டிஸ்சார்ஜ்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!