சத்திரக்குடி வட்டார கரும்பு விவசாயிகள் பட்டறிவு பயணம்
12/18/2020 4:56:00 AM
பரமக்குடி, டிச. 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2020- 21 திட்டத்தின் கீழ், நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சத்திரக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக மஞ்சக்கொல்லை, கூறைகுளம், எட்டிவயல் கிராமங்களில் இருந்து 50 விவசாயிகள், தேனியில் உள்ள ராஜ் கரும்பு ஆலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு பூச்சி மேலாண்மை உர நிர்வாகம், அறுவடை தொழில்நுட்பம், கரும்பு வயல்வெளி பயிற்சி, நீர் மேலாண்மை உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து முதன்மை நிர்வாகி பாலசுப்பிரமணியன் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா விவசாயிகளுக்கு கருத்துரை வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மெய்விழி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!