தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கமணவாளநகரில் ரூ.3 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எஸ்.பி அரவிந்தன் இயக்கி வைத்தார்
12/18/2020 3:26:41 AM
திருவள்ளூர், டிச.18: தொடர் குற்றங்களை தடுக்க, திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் காவல் எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் பகுதியில் 2, மேல்நல்லாத்தூர் முக்கிய சந்திப்பு பகுதியில் 2 , கீழ்நல்லாத்தூர் சந்திப்பு பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. 5 இடங்களில் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்தைக் கண்காணிக்கும் வகையில் 15 சிசிடிவி கேமராக்கள் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் இயக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் இதுவரை 4 ஆயிரத்து 800 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என அவர் தெரிவித்தார். இதில் டிஎஸ்பி துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணையா, சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், மகேஷ், நடராஜன், ரவி, கோபால், சங்கர், குமார் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தாய், மகனுடன் திடீர் மாயம்
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்
தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்
இடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
செய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!