தேக்கடி ஆதிவாசி காலனிக்கு காட்டுவழிச்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி
12/16/2020 3:15:33 AM
பாலக்காடு, டிச.16: பரம்பிக்குளம் தேக்கடியிலிருந்து செம்ணாம்பதி காட்டு வழிச்சாலை அமைத்து கோரி ஆதிவாசி மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடமும், எம்.எல்.ஏ. விடமும், வனத்துறையினரிடமும் கோரிக்கை வைத்து பல போராட்டங்கள் நடத்தினர். தற்போது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகள், ஆய்வுக்குப்பின் தேக்கடி-செம்ணாம்பதி-தேக்கடி காட்டு வழிச்சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை தேக்கடி-செம்ணாம்பதி மக்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக அமைக்க உத்தரவு முதலமடை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுளளது. வனத்துறை காட்டு வழிச்சாலை அமைக்க ஒரு ஹெக்டர் நிலம் வழங்கியுள்ளது. தேக்கடி முதல் செம்ணாம்பதி வரை காட்டு வழிச்சாலை அமைக்க 25 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஊராட்சி நிர்வாகமும், எம்.எல்.ஏ.வும் நிதியுதவிகள் செய்வதாக ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த சாலை அமைப்புப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகள்
சாலையோர பூங்காக்களை பராமரித்திட கோரிக்கை
நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்
மாவட்டத்தில் 10 நாட்களில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்