SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்தவித நிபந்தனையுமின்றி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

12/10/2020 11:53:27 PM

கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுககு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும், படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் டிசம்பர் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கால நிர்ணயத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எந்தவித விடுதலின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்