கெங்கவல்லி, வாழப்பாடியில் சந்து கடைகளில் மது விற்பனை 4 பெண்கள் உள்பட 13 பேர் கைது
12/10/2020 5:17:46 AM
வாழப்பாடி, டிச.10: சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கர் உத்தரவின் பேரில், வாழப்பாடி, ஏத்தாப்பூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையம், பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், வைத்தியகவுண்டன்புதூர் மற்றும் பெரிய கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலை, சிங்கிபுரம், வேப்பிலைப்பட்டி, புளுதிக்குட்டை, கோணஞ்செட்டியூர், குறிச்சி ஆகிய இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சந்துகடைகளில் மது விற்பனையில் ஈடுபட்ட அருள்மணி (44), ராமர் (53), கரன் (23), பொன்னாரம்பட்டி முருகேசன் (50), சிங்கிபுரம் லோகாம்பாள் (60), நடேசன் (75) கோணஞ்செட்டியூர் ராமசந்திரன் (58), செல்லம்மா (40), மேட்டுப்பட்டி மாதேஸ் (55), புழுதிக்குட்டை குப்பன் (60) உள்பட 11 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 590 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், கெங்கவல்லியில் போலீசார் நடத்தி சோதனையில், வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த விஜயா, மணிமேகலை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்
மேலும் செய்திகள்
15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிப்பு சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள், புதிய நிர்வாகிகள்
விற்பனைக்கு குவிந்த அலங்கார தோரணங்கள்
வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
5டன் பூமாலைகள் அனுப்பி வைப்பு
வெல்லம் விற்பனை சுறுசுறுப்பு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3.84 லட்சம் பேருக்கு சிகிச்சை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!