SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணத்தில் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சாலைமறியல்

12/7/2020 3:39:36 AM

கும்பகோணம், டிச.7: கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பு, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு வ.உ.சி மக்கள் இயக்கம் மற்றும் கும்பகோணம் பகுதி சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக கும்பகோணம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் பிள்ளை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அனைத்து வெள்ளாளர்களின் பெயரை மாற்று இனத்தவருக்கு பெயரை வைப்பதற்கு பரிந்துரை செய்த தமிழக அரசை கன்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேரை கும்பகோணம் கிழக்கு போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலை மறியலில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வணிக அணி செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு வ.உ.சி மக்கள் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்