கும்மிடிப்பூண்டி அருகே மழை வெள்ளத்தில் லாரியோடு அடித்து சென்ற 5 பேரை மீட்ட ஊராட்சி தலைவி
12/4/2020 6:46:39 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை டி.ஆர்.பி நகரில் தரைப்பாலத்தில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் அப்பகுதியில் சென்ற மினி லாரியில் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் லாரியோடு 500 மீட்டர் தண்ணீரில் அடித்து சென்றனர். உடனே. அதில் ஒருவர் அங்கிருந்த மரத்தை பிடித்துக் கொண்டார். மற்ற நால்வரும் லாரியின் மேல் ஏறி நின்று கொண்டனர். இதை அறிந்த எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளி, எம்.டி.சி.சுகுமார், முனிரத்தினம், விக்னேஷ், ஜெ.சுரேஷ் ஆகியோர் மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சி.எம்.ஆர். முரளி பெரிய கயிற்றை வீசி லாரியில் ஏறி நின்றவர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டார். மரத்தை பிடித்து நின்றவரையும் அவருடன் வந்தவர்கள் காப்பாற்றினர்.
சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கதிர்வேல், ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ் சிவகுமார் ஆகியோர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிந்து(22), சப்ஜி(23), செஞ்சியை சேர்ந்த சிவா(22), லாரி டிரைவர், ஆனந்தன்(55), திருவண்ணாமலையை சேர்ந்த அப்சர்(23) ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். மழை வெள்ளத்தில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு துறையினர் வருவதற்குள் துரிதமாக மீட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா முரளியை கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும், அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!