தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
12/4/2020 4:00:36 AM
திருப்பூர்,டிச.4: திருப்பூரில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று, திருப்பூர் நகர் மற்றும் சுற்றுபகுதிகளில்,அதிகாலை முதலே மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பணி நிமித்தமாக, இருசக்கர வாகனங்களில், ஓரிடத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்தனர். பொதுமக்கள் பலரும் ரெயின்கோட் அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர். வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து, குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்