
2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 14:26விவசாயிகள், தொழிற்துறையினர், நடுத்தர மக்கள் என அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது : பிரதமர்
- 14:26
பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் ் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் : பிரதமர் மோடி
- 13:25
CNG உள்ளிட்ட பசுமை எரிசக்தி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
- 13:24
48 லட்சம் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
- 13:23
மாங்குரோவ் காடுகளை பாதுகாக்கவும், அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம்: நிர்மலா சீதாராமன்
- 12:52
இந்த நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ 2,200 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 12:51
அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:49
இறால் உணவு பொருட்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:48
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ. 4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சமாக உயர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:43
இயற்கை உரங்களை ஊக்குவிக்க 'பிஎம் பிரணாம்' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:37
உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி குறைப்பு; செல்போன் கேமரா, லென்ஸ், பேட்டரி இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு: நிர்மலா சீதாராமன்
- 12:35
வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு;ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையான வருமானத்துக்கு 5% வருமான வரி: நிர்மலா சீதாராமன்
- 12:32
2023-24-ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:32
Make in India திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 3 செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 12:29
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 12:27
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
- 12:25
2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம்: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
- 12:25
தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு: ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன்
- 12:21
நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமானவரித் தாக்கல் செய்துள்ளனர்: நிர்மலா சீதாராமன்
- 12:20
புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு
- 12:18
இறக்குமதி கிச்சன் சிம்னிகளுக்கான சுங்க வரி 7.5%லிருந்து 15%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
- 12:15
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 12:14
3 கல்வி நிறுவனங்களில் AI திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
- 12:12
ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்
- 12:11
2023-24ம் நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: நிர்மலா சீதாராமன்
- 12:9
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
- 12:7
7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:5
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
- 12:3
சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 12:1
ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள், சேவைகளை பெற PAN மற்றும் ஆதார் ஆகியவை அடையாள ஆவணங்களாகின்றன: நிர்மலா சீதாராமன்
- 11:58
பழைய மாசடைந்த வாகனம் என்பதை மாற்ற Old polluted என்று கூறுவதற்கு பதில் old political என்று நிர்மலா கூறினார்; old political என்பது அரசியல் மாற்றத்தை குறிக்கும் என்பதால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
- 11:56
சூரிய ஒளி ஆற்றல் உள்ளிட்ட பசுமை எரிசக்தி ஆலை ரூ. 27,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்
- 11:54
நாடு முழுவதும் டிஜிட்டல் நூலகங்கள் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழிகளிலும் அமைக்கப்படும்
- 11:53
கச்சா எண்ணெய் உள்ளிட்ட படிம எரிபொருள் திட்டங்களுக்கு மாற்றாக, மாற்று எரிபொருள் திட்டங்களுக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:52
போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:50
நாட்டில் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:49
நாட்டின் நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் இ- நீதிமன்றங்களுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:49
ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:47
குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:45
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்: நிர்மலா சீதாராமன்
- 11:44
50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:43
நாட்டில் உள்ள முக்கிய நகரங்களின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 10,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:42
கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்குப் பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு: நிர்மலா சீதாராமன்
- 11:39
நாட்டின் பல்வேறு துறைகளில் மூலதன முதலீடுகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:37
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:36
வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி என ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு
- 11:34
பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:29
ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்: நிர்மலா சீதாராமன்
- 11:27
கிராமப்புற பகுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும்: நிர்மலா சீதாராமன்
- 11:26
புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:25
மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
- 11:24
விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்
- 11:22அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைதல், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு
வளங்களை பயன்படுத்துதல், வேளான் வளர்ச்சி ஆகியவை இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் - நிதியமைச்சர் பேச்சு
- 11:20
ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ், 44.60 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
- 11:17
உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- 11:16
உஜ்வாலா திட்டத்தின் கீழ், 9 கோடி ஏழை-எளிய மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்
- 11:14
பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
- 11:13
2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
- 11:12
மோடி ஆட்சிக்கு வந்த பின் 9.6 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்
- 11:10
கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன: நிர்மலா சீதாராமன் உரை
- 11:10
9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேற்றம்: நிர்மலா சீதாராமன்
- 11:9
2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்ற பின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 11:8
இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 11:7
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 11:6இந்த ஆண்டும் காகிதமில்லாத பட்ஜெட் பட்ஜெட் தாக்கல்
- 11:4
இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிற்துறையினோருக்கான பட்ஜெட்டாக இது இருக்கும்: நிர்மலா சீதாராமன் உரை
- 11:3
2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 10:42
பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பட்ஜெட் நகல்கள் பரிசோதனைக்கு பிறகு கொண்டு செல்லப்பட்டன
- 10:37
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!
- 10:9
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
- 9:59
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை .
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது அதனை தொடர்ந்து 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்
- 9:8
ஜனாதிபதி முர்முவை சந்திக்க ராஷ்டிரபதி பவன் சென்றடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 8:42
ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்திற்கு நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை
- 8:41
இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் : நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத்
- 8:40
ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்திற்கு நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கரத் வருகை
- 8:27
2023-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கரத் பிரார்த்தனை
- 8:9
5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
Top 5 News