பிரட் பிட்சா
2023-03-17@ 16:54:53

தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* தக்காளி கெட்சப் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)
* ஆரிகனோ - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - சுவைக்கேற்ப
* ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஆரிகனோ, உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முதலில் டோஸ்டர் அல்லது தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மேல் சிறிது தக்காளி கெட்சப்பை தடவ வேண்டும். பிறகு அதன் மேல் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை பரப்ப வேண்டும். அதன் பின் அவற்றின் மேல் சிறிது துருவிய சீஸை பரப்ப வேண்டும். பின்னர் அந்த பிரட் துண்டை சூடான தோசைக்கல்லின் மீது வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் சீஸை உருக வைத்து எடுத்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.
Tags:
பிரட் பிட்சாமேலும் செய்திகள்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!