SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதினா சிக்கன் மசாலா

2023-03-17@ 16:51:01

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப அரைப்பதற்கு
* புதினா இலைகள் - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 2 தாளிப்பதற்கு
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1


செய்முறை:  

முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்சர் ஜாரில் புதினா மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி வதக்க வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.அடுத்து அதில் கழுவிய சிக்கனை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் பாதியாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் மிளகுத் தூளைத் தூவி கிளறி, இறக்கினால், சுவையான புதினா சிக்கன் மசாலா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்