SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவக்காய் பிட்லாய்

2023-02-08@ 15:19:02

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 200 கிராம்
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
துவரம்பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை:

துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால். பாகற்காய் பிட்லை தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்