கவுணி அரிசி பாயாசம்
2023-02-08@ 15:15:57

தேவையான பொருட்கள்:
கவணி அரிசி - 4 மேஜைக்கரண்டி
பால் - ஒரு லிட்டர்
பேரிச்சம்பழம் கொட்டையை நீக்கி - 20
கண்டன்ஸ்டு மில்க் - 4 மேஜைக் கரண்டி
துருவிய பாதாம் பருப்பு - 10
ரோஸ்வாட்டர் - 4 சொட்டுக்கள்.
செய்முறை:
கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும். பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கிய பின்னர், தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியில், தண்ணீரை வடித்து விட்டு, பின்பு லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும். (அல்லது அரிசியை வேக வைத்து பிறகும் பாலயை சேர்க்கலாம்.)அரிசி வெந்தவுடன், அதனுடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து பாயாச பதத்திற்கு வந்ததும், துருவிய பாதாம் ரோஸ் வாட்டர் நான்கைந்து சொட்டுகள் சேர்த்து பரிமாறலாம். வறுத்த முந்திரியை மேலே தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
Tags:
கவுணி அரிசி பாயாசம்மேலும் செய்திகள்
கிரீக் சாலட்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!