முட்டை பிரியாணி
2023-02-07@ 17:27:08

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
முட்டை - 3
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1/2 கப் * புதினா - 1/4 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் முட்டைகளை நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை வெந்ததும், அதன் ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் கழித்து, அரிசியை கழுவி, குக்கரில் போட்டு, அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசுமதி அரிசி சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த முட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு நன்கு கிளறி விட்டு, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தட்டுக்கடை முட்டை பிரியாணி தயார்.
Tags:
முட்டை பிரியாணிமேலும் செய்திகள்
கேரளா மீன் பொழிச்சல்
புதினா சிக்கன் மசாலா
சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை
சுவையான மட்டன் சாப்ஸ்
சங்குக் கறி தொக்கு
ஸ்பெஷல் ரத்தப்பொரியல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி