SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீசுவான் பன்னீர்

2023-02-07@ 17:20:34

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 200 கிராம்
குடைமிளகாய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1/2
பூண்டு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சோயா சாஸ் - 1/8 டீஸ்பூன்
சீசுவான் சாஸ் - 1/8 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
வெள்ளை ஸ்பிரிங் ஆனியன் - 1/2 டீஸ்பூன்
பச்சை ஸ்பிரிங் ஆனியன் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து, நீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்பிரின் ஆனியனின் வெள்ளை மற்றும் பச்சை பகுதிகளை சேர்த்து, இஞ்சி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் ப்ரை செய்ய வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சீசுவான் சாஸ், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் சோள மாவை சிறிது நீரில் கலந்து, அதை வாணலியில் உள்ள சாஸ் உடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சீசுவான் பன்னீர் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்