செட்டிநாட்டு உப்புக்கறி வறுவல்
2023-02-06@ 17:57:33

தேவை:
எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
பூண்டு - 20 பற்கள் (இடித்தது)
இஞ்சி - 1 இன்ச்
(பொடியாக நறுக்கியது)
குண்டு வரமிளகாய் - 10
தக்காளி - 1 நறுக்கியது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
பக்குவம்:
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் கிடாக் கறி துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டிவிட வேண்டும். மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும்போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்றாக வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கி, பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும்வரை வதக்க வேண்டும். பிறகு ஏற்கனவே வேகவைத்த மட்டனை அதில் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்புக் கறி வறுவல் தயார்.
மேலும் செய்திகள்
சிவப்பரிசி புட்டு
செட்டிநாடு சிக்கன் கிரேவி
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
உருளைக்கிழங்கு வறுவல்
வாழைப்பூ அடை
கந்தரப்பம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி