வாழை இலை பரோட்டா
2023-02-06@ 17:07:14

தேவையான பொருட்கள்:
சிக்கன் சால்னா – 2 கப்
வறுத்த சிக்கன் துண்டுகள் – 1 கப்
வாழை இலை – 1
நறுக்கிய வெங்காயம் – 1
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும். பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும். இப்போது அதில் வறுத்த கறி துண்டுகளை வைத்து நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பின்பு அதன் மேல் மீண்டும்1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும். இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடிக்கவும். இப்போது நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும். இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேக விடவும். இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழை இலை பரோட்டா தயார்.
Tags:
வாழை இலை பரோட்டாமேலும் செய்திகள்
பருப்பு உருண்டை பிரியாணி
கேரளா மீன் பொழிச்சல்
புதினா சிக்கன் மசாலா
சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை
சுவையான மட்டன் சாப்ஸ்
சங்குக் கறி தொக்கு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!