SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிளகு வடை

2023-02-03@ 17:20:33

தேவையான பொருட்கள்:

கருப்பு உடைத்த உளுந்து – ஒரு கப்,
பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
சுக்கு – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பொரிக்க கடலை எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

தோலுடன் கூடிய கருப்பு உளுந்து நிறைய சத்துக்கள் கொண்டது. இது பெரிய கடைகளில் கேட்டால் கிடைக்கும், வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு உடைத்த கருப்பு உளுந்து எடுத்து நன்கு கழுவி சுத்தம் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். ரொம்பவும் நைசாக அரைத்து விடாமல், ஒன்றிரண்டாக அரைத்து எடுத்தால் அரைத்து எடுத்த இந்த உளுந்துடன் பச்சரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு மிளகை ஒன்றிரண்டாக இடித்து சேர்க்க வேண்டும். மிளகு தான் இதில் மையின்! பின் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஒரு ஃப்ளேவர் கிடைக்க சுக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். சுக்கு இடித்து பவுடர் போல சேர்க்க வேண்டும். இது ஆப்ஷனல் தான், தேவை இல்லை என்றால் விட்டுவிடலாம். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். நன்கு வடை தட்டும் அளவிற்கு கெட்டியாக மாவு இருக்க வேண்டும். இதில் தண்ணீர் எதுவுமே சேர்த்து விடக்கூடாது. உளுந்தில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது. கெட்டியாக வடை போல தயார் செய்ததும், வாழை இலை அல்லது திக்காக இருக்கும் பாலிதின் கவர் ஒன்றை எடுத்து அதில் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். தட்டை போல எவ்வளவு மெலிதாக தட்ட முடியுமோ, அந்த மாதிரி உருண்டையாக உருட்டி எடுத்து தட்டிக் கொள்ளுங்கள். பின்பு நடுவில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கடலை எண்ணெய் ஊற்றுங்கள். கடலெண்ணெய் ஊற்றி செய்யும் பொழுது இந்த மிளகு வடை ரொம்பவே ருசியாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்