இடியாப்ப கிச்சடி
2023-02-02@ 15:12:42

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1/4 கோப்பை
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/4 துண்டு
மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
ஊளுந்து - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தில் ஊற்றி இட்லியாக வார்க்கவும். இட்லியை சூடு ஆறுவதற்குள் இட்டியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக அரிந்து கொள்ளவும். இஞ்சியையும், பூண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, ஊளுந்து, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் மசாலாத்தூள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் ஆறிய இடியாப்பத்தை போட்டு நன்றாக கிளறவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தலையைப் போட்டு இறக்கவும்.
Tags:
இடியாப்ப கிச்சடிமேலும் செய்திகள்
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஸ்பெஷல் கத்தரிக்காய் சாதம்
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி