காஷ்மீரி காவா சாய்
2023-02-01@ 17:59:50

தேவையானவை:
க்ரீன் டீ - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
பட்டை - சிறிய துண்டு,
பாதாம் பருப்பு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை,
உப்பு - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மூன்று கப் நீரைக் கொதிக்கவிட வேண்டும். அதில் க்ரீன் டீயுடன் ஏலக்காய், பட்டையைப் பொடித்துச் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். பாதி ஆனதும் குங்குமப்பூ சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கி வடிகட்டி பரிமாறவும். (இதில் வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம்)
பலன்கள்:
உடலுக்கு உடனடி ஆற்றல் தருவது. இதில் உள்ள குங்குமப்பூ செரிமானத்தை மேம்படுத்தும். பாதாம் உடலில் நல்ல கொழுப்பைச் சேர்க்கும். பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
Tags:
காஷ்மீரி காவா சாய்மேலும் செய்திகள்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!