ஓட்ஸ் பொட்டுக்கடலை லட்டு
2023-01-31@ 17:33:48

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கோப்பை (250 கிராம்)
பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 கோப்பை
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி அல்லது பாதாம் - 10
நெய் - 1 தேக்கரண்டி
பால் - 1/2 கோப்பை
செய்முறை:
முதலில் ஓட்ஸை லேசாக வறுத்து கொள்ளவும். வறுத்த ஓட்ஸ் சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். பொடியாக்கிய ஓட்ஸை மீண்டும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை வாணலில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொட்டுக்கடலையுடன், சர்க்கரை, வறுத்த ஓட்ஸ் மாவு, ஏலக்காய் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியை சிறிய அளவில் நறுக்கி, சிறிது நெய்யில் பொன் நிறமாக வறுத்து, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவுக் கலவையை அகண்ட பாத்திரத்தில் போட்டு, சுண்ட காய்ச்சிய பாலை சூடு குறையாமல் சிறுது சிறிதாக மாவில் ஊற்றி, மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மாவு கையில் ஒட்டாத வண்ணம் தேவையான அளவு மட்டும் பாலை ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். மாவிற்கு மேல் நெய் ஊற்றி பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிசைந்து கொள்ளவும். முந்திரி அல்லது பாதாமை துருவி, உருண்டையில் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
Tags:
ஓட்ஸ் பொட்டுக்கடலை லட்டுமேலும் செய்திகள்
ஓட்ஸ் பாயசம்
பன்னீர் பாயசம்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்
மைக்ரோவேவ் மில்க் ஸ்விட்
ஐஸ்கிரீம் (வெனிலா)
பனை ஓலை கருப்பட்டி கொழுக்கட்டை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!