SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு பசலைக் கீரை அடை

2023-01-31@ 17:27:58

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு ‍ - 200 கிராம்
கரகரப்பாக திரித்த மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
பசலை கீரை (பொடியாக நறுக்கியது) -‍ அரை கோப்பை
நெய் ‍ - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ‍ முன்று மேசைக்கரண்டி
பச்ச மிளகாய் ‍ ‍ (பொடியாக நறுக்கியது) - ஒன்று
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
தண்ணீர் ‍ ‍ - கால் கோப்பை / தேவையான அளவு
உப்பு ‍ - தேவையான அளவு


செய்முறை:

கம்பு மாவை லேசாக வறுத்து கொள்ளவும். கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும். ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும். தோசைக்கல் / நான்ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து காயவைத்து, சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி, பின் தட்டி வைத்துள்ள ரொட்டியை இட்டு இரண்டுபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து மீண்டும் லேசாக நெய் தடவி எடுத்து சூடாக பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்