SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளு சாதம்

2023-01-30@ 17:59:12

தேவையான பொருட்கள்

கொள்ளு - 150 கிராம்
அரிசி - 1 குவளை (டம்ளர்) (250 கிராம்)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எலுமிச்சை - 1/4 பழம்
பூண்டு - 10 பல்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

அரிசியை அரை மணி நேரம் வைத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.கொள்ளை லேசாக (எண்ணெய் இல்லாமல்) வறுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை நீள வாக்கிலும், பூண்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.அனைத்தும் நன்றாக வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த கொள்ளு சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.அதனுடன் தண்ணீர் 4 குவளை (டம்ளர்) (ஒரு பங்குக்கு 3 பங்கு) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள அரிசியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, ஆவி அடங்கியதும், எலுமிச்சம்பழ சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்