மல்லி சிக்கன்
2023-01-24@ 17:32:51

தேவை
சிக்கன் துண்டுகள் -1 கிலோ
கொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
வெங்காயம் -3 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4 (நறுக்கியது)
தயிர் 250 மில்லி லிட்டர்
தனியா தூள் 3 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப.
செய்முறை
தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும். சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிகபட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரைச் சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும். இப்போது மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.
Tags:
மல்லி சிக்கன்மேலும் செய்திகள்
முட்டை பிரியாணி
வாழை இலை பரோட்டா
சிக்கன் லெக் ரோஸ்ட்
நிக்காஹ் பிரியாணி
முட்டை சேமியா உப்புமா
சிக்கன் டிக்கா பார்பிகியு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!