கொத்தமல்லி பொங்கல்
2023-01-24@ 17:17:22

தேவையானவை:
பச்சரிசி - 250 கிராம்,
பாசிப்பருப்பு - 150 கிராம்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - 4 கைப்பிடி,
நெய் - 6 தேக்கரண்டி,
முந்திரி - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும். நன்றாக கழுவிய பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குழைவாக வேக வைக்கவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி பொங்கல் தயார்.
Tags:
கொத்தமல்லி பொங்கல்மேலும் செய்திகள்
வேப்பம்பூ ரசம்
கவுணி அரிசி பாயாசம்
கேழ்வரகு கோதுமை ரவை இட்லி
மிளகு வடை
ஓமக் குழம்பு
கொண்டைக்கடலை ஃப்ரூட் சுண்டல்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!