சிறுதானிய பாஸ்தா
2023-01-23@ 18:06:22

தேவை
சாமை மாவு - 100கிராம்
கேரட் -50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயம்- 50 கிராம்
பூண்டு -8 பல்
வெண்ணெய் -100 கிராம்
உப்பு தேவையான அளவு
மிளகு தூள் தேவையான அளவு.
செய்முறை
சாமை மாவுடன் உப்புகலந்த சூடான நீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு சிறு நிளஉருண்டைகளாக உருட்டவும். இதை நன்கு கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக விடவும். பின் வடிக்கவும். காய்கறிகளுடன், பூண்டு சிறிது உப்பு கலந்து வேகவைத்து, வடித்து, மையஅரைத்து கொள்ளவும். வெண்ணெயை சூடாக்கிபொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும், பின் வடிகட்டிவைத்துள்ள உருண்டைகளை தாளித்து பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மெதுவாக கலந்து கொதித்த பின் உப்பும், மிளகு தூளும் கலந்து பரிமாறவும்.
Tags:
சிறுதானிய பாஸ்தாமேலும் செய்திகள்
மல்டி மில்லட் தோசை
முடக்கத்தான் தோசை
பாசிப்பருப்பு சூப்
தினை பனீர் கட்லெட்
சாமைமாம்பழக் கேசரி
முள்ளங்கி சோள சப்பாத்தி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!