கோங்குரா ஊறுகாய்
2023-01-23@ 18:05:40

தேவை
புளிச்சகீரை - 2 கட்டு.
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு.
பச்சை மிளகாய் - 25 கிராம்.
கடுகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்.
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்.
பூண்டு - 8 பல்.
பெருங்காயம் - அரை டீஸ்பூன்.
கல் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணெய் - 50 கிராம்.
கடுகு - 2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 6 (இரண்டாகக் கிள்ளியது).
பக்குவம்
புளிச்ச கீரையின் இலைகளை ஆய்ந்து சுத்தமாகக் கழுவி, ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து, பொடியாக நறுக்கி, புளியை ஒரு கப் கொதிக்கும் நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்க்கவும். பூண்டு சிறிது வதங்கியதும் கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் புளித் தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கீரை நன்கு சுருளும் வரை கிளறி இறக்கவும். பிறகு மிக்ஸியில் மைய அரைத்து தாளிக்கவும். ஆந்திரத்தில் இந்த ஊறுகாய்க்கு பல செய்முறைகள் உள்ளன. இங்கே சொல்லியிருப்பது அதிகம் பயன்படுத்தும் அடிப்படை முறை.
Tags:
கோங்குரா ஊறுகாய்மேலும் செய்திகள்
வத்தல் சாதப்பொடி
கறிப் பொடி
காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
மிக்ஸ்ட் மில்லட் அடை
கொத்து மஞ்சள் நெல்லி ஊறுகாய்
சீசுவான் பன்னீர்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி