மசாலா சேமியா பொங்கல்
2023-01-19@ 17:50:27

தேவையானவை:
சேமியா - 1 கப்,
தண்ணீர் - 3 கப்,
பாசிபருப்பு - ¼ கப்,
நெய் - 2 மேஜைக்கரண்டி,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்,
முந்திரி - 10,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
காய்ந்த மிளகாய் - 2,
மல்லி விதை - 1 தேக்கரண்டி,
சீரகம் - ½ தேக்கரண்டி,
மிளகு - 1 ஸ்பூன்,
பட்டை - 2,
வெங்காயம் - 4,
ஏலக்காய் - 2.
செய்முறை:
சேமியாவுடன், பாசி பருப்பை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் அடுப்பில் வைத்து வேக வைத்து இறக்கவும். காய்ந்த மிளகாய், மல்லி விதையை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், லவங்கம், முந்திரி சேர்த்து இறக்கவும். வேக வைத்த சேமியாவில் உப்பு மற்றும் பொடித்த பொடி, தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறவும். சூடான மசாலா சேமியா பொங்கலை சட்னியுடன் பரிமாறலாம்.
Tags:
மசாலா சேமியா பொங்கல்மேலும் செய்திகள்
பச்சைப் பயறு தோசை
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!