SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரமல் கேக்

2023-01-12@ 18:02:16

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 170 கிராம்
வெண்ணெய் - 115 கிராம்
பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன்
ஜாம் - 30 கிராம்
பால் - ஒரு டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 115 கிராம்
பெரிய முட்டை - 2

காரமல் செய்வதற்கு தேவையானவை :

தண்ணீர் - 50 மில்லி
சர்க்கரை - 50 கிராம்


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் எடுத்து போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது .தண்ணீரை விட்டு  5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும்.பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும்.மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும். அதனுடன் அடித்த முட்டை வெள்ளை கருவை போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும். ஏழு அங்குல கேக் பேக் செய்யும் இரண்டு தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 40 நிமிடம் வரை பேக் செய்யவும். முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் பாத்திரம் உபயோகிக்கவும். பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது. கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்