ஓட்ஸ் பொங்கல்
2023-01-12@ 18:00:09

தேவையானவை:
ஓட்ஸ்- 1 கப்,
பாசிப்பருப்பு- ½ கப்,
இஞ்சி- 1 சிறு துண்டு,
பெருங்காயத்தூள்- ¼ டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்,
மிளகு,
சீரகம் தலா - ½ டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை சிறிது,
முந்திரி பருப்பு - 6.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஓட்ஸ், பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுக்கவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி 3(அ)4 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். சற்று ஆறியவுடன் குக்கரைத் திறந்து மசித்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானவுடன் அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடித்த மிளகு, சீரகத்தைப் போட்டுத் தாளித்து அதை பொங்கல் மேல் ஊற்றி கிளறி விடவும். சுவையான ‘ஓட்ஸ் பொங்கல்’ தயார்.
Tags:
ஓட்ஸ் பொங்கல்மேலும் செய்திகள்
பச்சைப் பயறு தோசை
வெள்ளைக் கறி
தோசைக்கான ஸ்பெஷல் சாம்பார்
மீல் மேக்கர் கோலா
முருங்கை மசாலா பொரியல்
சீரக துவையல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி