ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்
2023-01-06@ 15:25:35

தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 20,
எள் – 2 டீஸ்பூன்,
சோம்பு அல்லது சீரகம் – 2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கடுகு – 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும் பிறகு சீரகம் – எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். 2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு பயன்படுத்தவும்.
மேலும் செய்திகள்
வத்தல் சாதப்பொடி
கறிப் பொடி
காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
மிக்ஸ்ட் மில்லட் அடை
கொத்து மஞ்சள் நெல்லி ஊறுகாய்
சீசுவான் பன்னீர்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி