கோதுமை பாதுஷா
2023-01-03@ 17:26:56

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒன்றரை கப்,
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியான நெய் - அரை கப்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
சமையல் சோடா - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - ஒரு கப்,
தண்ணீர் - அரை கப்,
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரி யாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
Tags:
கோதுமை பாதுஷாமேலும் செய்திகள்
வரகு பாசிப்பருப்பு முறுக்கு
பொரி அல்வா
பொட்டுக்கடலை முறுக்கு
தேங்காய்ப்பால் முறுக்கு
சுகியம்
பூண்டு முறுக்கு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி